பக்கம்:முன் பனிக் காலம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் {{త్తి செய்ய ஆள் இருந்தால், 'காலவரிஷி”, “ஊர்வசியின் சாபம்’ ஆகியவற்றை நடிக்கலாம். 'காதலர் கண்கள்”, கபேயல்ல பெண்மணியே” என்பன வே டி க் கை விளைக்கும் நாடகங்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்னும் நாடகம் சிறந்ததன்று. புஷ்ய வல்லி”, கசுந்தரி’ என்பனவற்றிற்கும் அதிக மதிப்பு இல்லை. இவர் எழுதிய நாடகங்களில் வரும் பாத்திரங்களிற் பெரும்பான்மையன ஆடக் காத்திருக்கின்ற ஆட் தளை ஒட்டிப் படைக்கப்பட்டிருப்பது அறியத்தக்கது. உதாரணமாக, இரண்டு நண்ப”ரில் வரும் மனோரன் ர்ெங்கிவிடிவேலு என்பாருக்காக எழுதப்பட்டது. வேதாள உலக”த்தில், தத்தன்” பாகம் இராஜ கணபதி முதலியாருக்காக அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நடிகர்களுக்காகப் பாத்திரங்களின் இயல்பை வேறு படுத்தி வரைவது சிறந்த முறையோ எனப் பலர் ஐயுறுவர். பழைய கதைகளில் வரும் பாத்திரங்கனை நடிகருக்கு ஏற்ப மனம் போனவாறு திரித்தல் கூடாது. இவ்வாறு திரித்திலர் முதலியார். ஆனால், புதுக் கதைகளையும் உள்ள நடிகருக்கு எற்ப வரைந்து விட்டால், பிற சபையினர், பிற கூட்டத்தார் தடிக்கும் போது இடையூறு எற்படும். நாடகத்திற்கு நடிகரே யொழிய, நடிகருக்காக நாடகம் அன்று. இவர் எழு திய நாடகங்களின் சிறப்பு, அவை முழுவதும் உரை நடையால் இயன்று நடிக்கத்தக்கல்ைாப் உள்ளன வென்பது. இக்கால நாடகங்கள், முற்கால இடைக்கால நாட கங்களினின்று வேறுபடுவது இவ்வகையிலாகும்.