பக்கம்:முன் பனிக் காலம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 IG நாடகத் தமிழ் இக்கால நாடகங்களில் இன்றியமையா இடங்களில் அன்றிப் பாட்டுகள் இல்லை. இடைக்காலத்தில் ஆடு வோர் மனப்போக்கைப்போல் உரையைப் படைத்துக் கொண்டது போய் வசனங்கள் வரையறுத்து எழுதப் பட்டுவிட்டன. இடைக்காலத்தில் அரசன் மந்திரி, சேவகன் என்ற அளவில் பொதுப் பெயராக இருந்த பாத்திரங்களுக்கு எல்லாம் இக்கால நாடகங்களில் தனித் தனிப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது. திரு. சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களிலும் குற்ற்ங்கள். இல்லாமல் இல்லை. லிலர்வதி சுலோசனா வில் சில பாத்திரங்களின் தனி மொழிகள்,(Solilogy) அங்கம் காட்சி-1 லீலாவதி பேச்சு அங்கம்:8, காட்சி-2 சுலோசனை.பேச்சு). இத்தனி மொழிகளை நீண்டநேரம் ஒரே பாத்திரம், நாட்க மேடைமீது பேசிக் கொண்டு நின்றால், மக்களுக்குச் சலிப்பு எற்படும்: கைதட்டி அனுப்பிவிடுவார்கள். பல நாடகங்களில் காதலன் காதலிக்குப்துல்முற்ைமுேத்தமிடுவதாக வரைந் திருக்கிறார். இதனை நாடக ம்ேடைமீது காட்டுவது ஆகாது: சமஸ்கிருத மரபில் இத்ண்வெறுத்து ஒதுக்கியும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் சமஸ்கிருத மரபுகள்ைப் பெரும்பாலும் தழுவி நாடகம் எழுதிய வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியாரும் கலாவதிக்குச் சித்ர்நந்தன் பன் முறை முத்தம் அளித்ததாகவும், அவளுங் கொடுத்த தாகவும் குறித்திருப்பது எவ்வாறு பொருத்தம் உடைத்து என்பது விளங்கவில்லை. .