பக்கம்:முன் பனிக் காலம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நாடகத் தமிழ் அவை நமக்குக் கிட்டவில்லை. இக்குறையை ஒருவாறு போக்கக் கருதிச் சூரியநாராயண சாஸ்திரியார் நாடக வியல்’ என்றோர் இலக்கணம் வகுத்துள்ளார். வகுத்த இலக்கணத்திற்கு ஏற்ற இலக்கியமாகவே தம் நாட கங்களை இயற்றினார். இச்செயல் இலக்கணம் கண்ட தற்கு இலக்கணம் அமைத்தல்” என்ற மரபினின்று மாறுபட்டதேயாம். இனி, இந்நாடக இயலைக் குறித்துச் சுருக்கமாக ஆராய்வோம். நாடகத்தை முகம், பிரதிமுகம், கருப் பம், விளைவு, துய்த்தல் என்ற ஐந்து சந்திகள் உடைய தர்க்க் கூறியது சமஸ்கிருத தசருபக* மரபை ஒட்டியதாகும். எண்சுவை கூறும் தமிழ் மரபோடு சமநிலை என ஒன்றைக் கூட்டி உரைத்ததும் வடநூல் மற். நாடகத் தலைவர் தலைவியர் நன்னான்கு வகை யின்ர் என வகுத்ததும் அம்மரபை ஒட்டியே ஆகும். நாடகத்தை நாடகம், பிரகரணம் முதலாகப் பத்துச் சாதியாகப் பிரித்ததும், குத் திர தார னு ைடய காதலியே நடி என வரையறை செய்ததும் அந்நூன் மரபை யொட்டியேயாகும். - மேலும், நாடக இயல்’ என்னும் சாஸ்திரியாரவர் களது இலக்கணத்தில் மேனாட்டார் மரபுகள் பல தமிழ் நாட்டிற்கெனச் சொல்லப்பட்டிருக்கின்றன. உதா ரணமாக, இடப் பொருத்தம், காலப் பொருத்தம், Q&A, jooël Quiro535th (unity of time, place and action) எனப் பொருத்தம் வகுத்ததையும், கதை

  • தசரூபகத்தை உயர்திரு. விபுலான்ந்த அடிகள் ،، مதங்க

சூளாமணி” என்ற தமது நூலில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.