பக்கம்:முன் பனிக் காலம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக் காலம் 5 என்பது தினையின் மறுகாலைப்பற்றிய பேச்சால் கிடைக்கப் பெறுகிறது. எதோ ஒரு செயலைச் செய்து முடிக்கும் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ள அவன், அச்செயலை முடித்துவிட்டாற் பெறும் இன்பத்தோடு மனைவிமாட்டுப் பெறும் இன்பத்தையும் எய்தற் பாலன் என்பது அவரைக்கொடி பூக்கின்ற மறுகால் தினையைப்பற்றிய பேச்சால் கிடைக்கப் பெறுகிறது. எனவே, "சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரைபூக்கும் அரும்பனி யச்சிரம்” என்பதன்கண் உள்ள குறிப்புப் பொருள் அறியப் படும். இனி, இப்பருவத்தே குளிரினால் மக்கள் நடுங்குத லும், போர்வையை நாடுதலும், நெருப்பின் பக்கத்தே இருக்க விரும்புதலும் இயல்பு என அறிவோம். இவ்வியல்புகளை அறிந்து பழந்தமிழ்ப் புலவர் முன் பனிச் செய்திகளாக அவற்றைக் குறித்து வைத்திருப் பது கேட்டு மகிழ்தற்குரிய செய்தியாம். ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய பரிபாடற் பாட்டொன்றில் மார்கழி மாதத்தைப்பற்றிப் பேசுகின்றவர், 'பனிப்படு பைதல் விதலைப் பருவத்து’ என்று கூறினார். விதலைப் பருவம் என்றால் நடுக் கத்தைச் செய்யும் காலம் என்பது பொருள். நடுக்க முறும் மக்கள் போர்வையை நாடுதல் கண்கூடு. படுக்கைக்குப் போகுங்கால் கம்பளங்களை எடுத்துப் பலர் போர்த்திக்கொள்வார்கள். இஃது இயல்பு. இவ்வியல்பினை அறிந்த திருத்தக்க தேவர் மக்கள், எலியின் உரோமத்தால் ஆகிய போர்வையை இக்