பக்கம்:முன் பனிக் காலம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ ፱ . மொழிப் பற்று: மொழிகள் எல்லாம் மக்கள் கூட்டுறவினால், உட னுறைவினால் அவர்களாலேயே உண்டாக்கிக் கொள் ளப்பட்டவை என்பது அறிஞர் அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஒரு மொழியைக் கடவுள் உண் டாக்கினார் எனக் கூறுவது உபசாரமாகவே அன்றி உண்மையாக அன்று. ஒரு மொழியினர் பிற மொழி யினரை விஞ்ச விரும்புகின்றவராய்க் கட்டிய கதை இது. தமிழினைச் சிவபெருமான் தந்தார், முருகப் பிரான் தந்தார் எனக் கூறுகின்ற இடத்து, பிற மொழிகளைக்காட்டிலும் தமிழ் .ெ மா ழி க் கு ஏற்ற முண்டு என்று கூற விழையும் கருத்தே நோக்கத் தக்கது. வடமொழியாகிய சமஸ்கிருதம் கடவுளால் படைக்கப்பட்டதெனக் கேட்டதும், தமிழரும் தமது மொழியும் கடவுளாற் படைக்கப்பட்டதே எனப் பேசத் தொடங்கினர். அதனால்தான் வடமொழி யைப் பாணினிக்கு வகுத்தருளி, அதற்கிணையாத் தமிழ் மொழியைக் குறுமுனியாகிய அகத்தியர்க்குக் கொல் லேற்றுப் பாகராகிய சிவபெருமான் வகுத்தருளினார்’ என்பது போன்ற சொற்கள் எழத் தலைப்பட்டன. ஒரு மொழியைத் தம் தாய்மொழியாகப் பெற்ற வர்கள் தொன்றுதொட்டுத் தம் மொழியே சிறந்தது, இனிமையுடையது எனப் பற்றுக் $ffff"|6357 ifffa5 # சொல்லி வருவாராயினர். தெலுங்கர்கள் தம் மொழியே சிறந்தது, தமிழில் ஒன்றும் இல்லை எனக் கூறும்