பக்கம்:முன் பனிக் காலம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மொழிப் பற்று எண்ணம் உடையவராய் தெனுகு தேட அரவம் அத்வானம்’ என்றனர். தெலுங்கு தேன் போன்றது என்றதைக் கேட்ட கன்னடியர்கள், கன்னடம் கஸ்தூரி, அரவம் அத்வானம்!” எனக் கூறலாயினர். அக்காலத்தில் தமிழர்கள் இவர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் அறவே இல்லாது. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்றனர். இதனால், தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்னும் பொருளுண்டு என்றனர். "தமிழ் தழீஇய சாயலவர்” என்ற விடத்துச் சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவரும், தமிழ்ப் பாட்டி இசைக் கும் தாமரையே என்றவிடத்து இராமாயணத்தில் கம்பரும், தமிழென்ற சொல்லை இனிமை என்னும் பொரு ளில் ஆண்டுள்ளனர் எனக் காட்டத் தலைப்பட்டனர். இதிலிருந்து தமிழர்க்குத் தம். மொழியின்மீதுள்ள பற்று புலனாகும். ஒருவர் தம் மொழியிடத்து வைக்கின்ற பற்றினால், பேரன்பினால், பெரும்திப்பினரில், அம்மொழி வல்லு நரைச் சிறப்பிப்பது உண்டு. அவ்வாறே தமிழரும் செய்து வந்தனர் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஒரு நாள் தமிழ்ப்புலவர் ஒருவர், வழிவந்த வருத்தம் காரணமாக, அரசனுடைய முரசு கட்டிலில் படுத்துவிட்டார். முரசினைத் தாங்கும் கட்டில் கட வுட்டொடர்புடையதாக மதிக்கப்படுவது மரபு. அதில் மனிதர் அமர்ந்தால் அரசனுக்கு வெகுளி உண்டாதல் இயல்பு. அப்படியிருந்தும் சேர அரசன் ஒருவன், அவ்வாறு உறங்கிக்கிடந்த புலவருடைய களைப்பு நீங்: கும்படி கவரி எடுத்து வீசினான் என அறிகிறோம்.