பக்கம்:முன் பனிக் காலம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பற்று I 17 விசயன் என்பார் தமிழையும் தமிழரசையும் பழித்தார் எனக் கேள்வியுற்றுச் சேரன் செங்குட்டுவன் அவ்வட நாட்டார்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண் டான் எனச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் பகரும்.

பால குமரன் மக்கள் மற்றவர்

காவா காவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றங் கொண்டிச் சேனை செல்வது” என்ற கால்கோட்காதை அடிகள் இதனைக் குறிப்பிடுவன் ஆகும். கனகவிசயரைச் செங்குட்டுவன் வுென்று, அவர் தலைமீது கண்ணகிக்கு உரிய கல்லினைக் கொண்டு வந்தான் என அறிகிறோம். மொழியைப் பழித்தாரை வெகுளுதலைப் போலவே, அதனைப் புகழ்ந்தாரை மக்கள் பாராட்டுவது இயல்பே. அதனால் தமிழ்மொழியைப் பாராட்டி உரைத்த அன்னி யராகிய டாக்டர் ஜி. யூ. போப், டாக்டர். கால்டுவெல், கிராண்டுடப் முதலியவர்கள் தமிழரால் என்றும் பாராட்டம் படும் நிலையில் உள்ளனர். தமக்கு அன்னிய மொழி யாகிய நம் தாய்மொழியைக் கற்றுத் தேர்ந்து முடிவில் தமது கல்லறையில் தமிழ் மாணவன்’ என்றே பொறிக்கப் படும் பேற்றினை விரும்பிய பெரியார் ஜி. யூ. போப் பினைப் பாராட்டாது இருத்தல் பொருந்தாது. அன்னியர் நம் மொழியினைப் பேசினவுடனேயே நமக்கு அவரிடத்து ஒரு தனி அன்பு தோன்றிவிடுகிறது. இத்தகைய மொழிப் பற்று மணிமேகலையில் வரும் ஒரு நிகழ்ச்சியாலும் வெளி யாகிறது. சாதுவன் என்னும் செட்டி கடலில் வழி தவறி ஒரு தீவகத்தே தக்க சாரணர் என்னும் மிருகவொழுக்