பக்கம்:முன் பனிக் காலம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í Í 8 மொழிப் பற்று கினர்பால் அகப்பட்டுக்கொண்ட பொழுது, அவர்க ளுடைய மொழியிற் பேசினதால் உயிர்தப்பிப் பிழைத்த தல்லாமல், அவர்தம் தலைவனிடமிருந்து செல்வம் பல பெற்று ஊர் திரும்பினான் எள அறிகிறோம். இதனை, மற்றவர் பாடை மயக்கறு மரபிற் கற்றனன் ஆகலின் கடுந்தொழில் மாக்கள் சுற்றும் நீங்கித் தொழுதுரையாடி (னர்)" எனவும், 'பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகினன்' எனவும் மணிமேகலைக்கு ஆதிரை பிச்சையிட்ட காதையிற் காணலாம், இடைக்காலத்தில் தமிழ்மொழியைக் கடவுளாகவே மதிக்கத் தலைப்பட்டனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், 'கண்ணாய் எழுலகும் கருத்தாப் அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே” எனக் கூறினார். பண்ணிடைத் தமிழொப்பாய்’ எனக் கடவுளைப்பற்றிப் பேசினர். தமிழ்மொழியைப் பேச்க் கேட்பதில், பாட்க் கேட்பிதில் கடவுளுக்கு இன்பம் உண்டு எனக் கூறத் தலைப்பட்டனர். அதனால், நாளும் இன்னிசையாற்றமிழ்பரப்பும் ஞானசம் பக்தனுக்கு உலகவர்முன் தாளமீந்து அவன்பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை' என்றார் சுந்தரர். இன்னுஞ் சிலர் தமிழ்மொழியை ஞாயிற்றினுக்கு ஒப்பிடத் தலைப்பட்டனர். சூரியனும் மலையில் தோன்று கிறான், தமிழும் பொதிய மலையில் தோன்றிற்று.