பக்கம்:முன் பனிக் காலம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மொழிப் பற்று. நீர் அறியும், கெருப்பறியும், அறிவுண் டாக்கி அேறிவித்தால் அறியும் கிலமுங் தானே” என்றார். முன் ஏழாவது நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் சமணரோடு போட்டியிட்டு வைகைப் புனலில் இட்ட ஏடு எதிரேறி வந்ததையும், அனலில் இட்ட எடு அழியாது. மிளிர்ந்ததையும் நினைவுகூர்ந்து, இவ்வாறு பரஞ்சோதி யார் கூறுவதிலிருந்து சமணர் இட்ட எட்டில் பிறமொழி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க ாைம். பதின்ெட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த கருணைப் பிரகாசர் என்பார், சீகாளத்திப் புராணம் இயற்றியவர், 'அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும் வென்று - - ஆரியதோ டுறழ்தரு தமிழ்தெய்வத்தை உண்ணினைந்து ஏத்தல் செய்வாம்” என்றார். "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்” என்றும், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித் திடடி பாப்பா’ என்றும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாடினார். "தமிழன் என்றொரு இனம் உண்டு-அமிழ்தம் அவனுடை மொழியாகும்’ என நாமக்கல் கவிஞர் கூறினார். புதுவைக் கவிஞர் பாரதிதாசன், 'தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை’ *தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம்”