பக்கம்:முன் பனிக் காலம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 2. நீதி நூல்களில் இலக்கிய நயம் நீதி நூல்களில் இலக்கிய நயம் என்பதைப்பற்றிக் கூறுவதற்கு முன்னால், பொதுவாக நீதி நூல்களில் இலக்கிய நயம் மிக்குக் காணப்படுவது இயல்பன்று என்று கூறுதல் வேண்டும். நீதிகளைக் கூற எழுந்தவை நீதிநூல்கள் ஆனதால், இவ்வாறு நடக்க வேண்டும் என்று விதித்தும், இவ்வாறு நடக்கக்கூடாது என்று விலக்கியும் செல்வது நீதிநூல்களின் இயல்பு ஆனதால், அந்நூல்களிற் சிறந்த கவிநயம் காண்பது அரிதாகத் தான் இருக்கும். நல்ல கவிதையின் நோக்கம் மக்கட்கு நீதி கூறுவதன்று என்று சொல்லத் துணியும் மேனாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் கருத்திற்கேற்ப, நம் நாட்டிலும் சில இக்காலத்தில் காவியத்தில், இலக்கியத்தில் வரும் கருத்தை நோக்க வேண்டா; இன்பத்தை மாத்திரம் கொள்ளுங்கள்' என்கிறார்கள். இது ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. இலக்கியங்கள் சிற்பத்தைப் போல, ஒவியத்தைப் போல, நடனத்தைப் போல ஒரு நுண்கலை யாக மதிக்கப்பட்டு இன்பம் நல்குமென்று எதிர்பார்க்கப் பட வேண்டுவது உண்மைதான். ஆனால், இவ்வருங் கலைகளுக்கும் இலக்கியமாகிய கலைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அது யாதென்றால், சிற்பம், ஓவியம் முதலிய வற்றினுடைய நோக்கம் இன்பம் பயப்பதொன்றே யாகவும், இலக்கியத்தினுடைய நோக்கம் அதனோடு நில்லாமல் மக்களுடைய வாழ்க்கையைச் சீர்படுத்த உதவுவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே.