பக்கம்:முன் பனிக் காலம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முன்பனிக் காலம் காலத்தே விரும்பிப் போர்த்துக்கொண்டனர் என்று சொல்லினார். 'கொங்கு விம்முபூங் கோதை மாதரார் பங்கயப்பகைப் பருவம் வந்தென எங்கு மில்லன எலிம யிர்த்தொழிற் பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்’ என்று கூறினார். கம்பளிப் போர்வை இல்லாதவர், துணிப் போர்வைதானும் இல்லாதவர் என் செய்வார்? தத்தம் கையையே போர்வையென நினைத்துக் கொண்டு கட்டிக்கொள்வர் அல்லரோ? அவரைப் போலவே, சேர மன்னனைக் கடும்பனியிற் காணச் சென்றி, ஒருத்தியின் மனம் கையே போர்வையாக வாசலில் நின்றதுவோ என்றவாறு அமைத்துப் பாடப்பட்ட பாடல் ஒன்று உளது. அந்த முத்தொள் ளாயிரச் செய்யுளை நோக்குவோம்: 'கடும்பனித் திங்கட்டன் கைபோர்வையாக நெடுங்கடை கின்றதுகொல் தோழி-நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குத்ார்க் கோதையைக் காணிய சென்றவென் நெஞ்சு.” இடையர்கள் காட்டிடத்தே பனி மிகுதலால் தீக் கடைகோலின் உதவியால் சிறு தீயை உண்டாக்கிக் குளிர்காயுஞ் செய்தியை உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிற்றரசன் தன்பால் இல்லாததையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவன் என்பதற்கு உவமையாக, இல்லாத சிறு தீயை உண்டாக்கும் இடையனைக் கூறினார். அந்தப் புறப்பாட்டுப் பகுதி இது: