பக்கம்:முன் பனிக் காலம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி நூல்களில் இலக்கிய நயம் #23 இதனால் அறிந்துகொள்ளத்தக்கன இரண்டு உண்மைகள்: வாழ்க்கையைச் சீர்படுத்த அமைந்த நீதி நூல்கள் சில இலக்கிய நயம் பெற்றிருத்தல் கூடும் என்பது ஒன்று. நல்ல இலக்கியங்களிற் சில, இன்பம் பயப்பதோடு நில்லாமல் வாழ்க்கையை மேம்படுத்தவும் கூடும் என்பது மற்றொன்று. தமிழிலுள்ள அற நூல்களைப்பற்றிப் பேசத் தொட்ங்கும் எவரும் திருக்குறளை முதலில் நினைத்தல் இயல்பு. சக, இன்சொற் கூறுக, விருந்தோம்புக என விதித்தும், பொய் கூறற்க, கள் உண்ணற்க, கொலை செய்யற்க என விலக்கியும் செல்லும். இவ் அற நூலிலே இலக்கிய நயம் இருக்குமோ என ஐயப் பட வேண்டா. நீதி கூறும்போது நயம்படச்சொல்லு தற்குச் சாதாரண மனிதனுக்குத் தெரியாது. ஆனால், திருவள்ளுவருக்குத் தெரியவில்லையெனில், யாருக்குத் தாம் தெரியும் இரக்கின்ற ஒருவனுக்கு இல்லை யென்று கூறாது, பொருளுள்ளவ்ர் கொடுக்க வேண்டு மென்று கூற விரும்புகிறார் திருவள்ளுவர். ஒரு பொருளை எனக்கு சக என ஒருவன் இரத்தல் இழி வுடைத்து என்பதை அறிவார். எதோ ஒர் அவசியம் ஏற்பட்டு யாசித்தே தீர வேண்டும் என்ற நிலையில், ஒரு வன் இரப்பதாக வைத்துக்கொள்வோம். அந்நிலையில், வேறொருவன் வீட்டிற் புகுந்து, தன் குறை இன்னது எனச் சொல்லத் தொடங்கிச் சொல்ல நா எழாமல் அவன் நிற்கின்றான். அவன் வந்து நிற்கிற நிலையைக் கண்டவுடனே, அவன் தன்னிடம் ஒரு பொருள் வேண்டி வந்திருக்கிறான் என்பதை அறியும் செல்வன் கூசாது இல்லை’ எனச் சொல்கிறான். இல்லையென்ற