பக்கம்:முன் பனிக் காலம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நீதி நூல்களில் இலக்கிய நயம் சொல்லைக் கேட்டமாத்திரத்தில், இரக்கிறவன் உயிர் போய்விடுகிறது. இல்லையென்ற விடமோ சொல்லு கிறவன் வாய்வழியே வந்தது. ஆனால், அவனை ஒன் றுஞ்செய்யவில்லையே! என்ன விந்தை!! அந்த நேரத் தில் அப்படிச் சொல் சொன்னவன் உயிர் எங்கேயா வது மறைந்திருக்க வேண்டும். எந்தப் புரையிலே புகுந்து, அந்த நேரம் ஒளித்துக்கொண்டதோ தெரிய வில்லையே! இல்லையெனக் கேட்டவுடன் மாய்ந்தான்: கூறினவன் மாயவில்லையே! பொருளை வைத்துக் கொண்டு வழங்காமற் கெடுகிறவன் இருந்தால் என்ன, இறந்தால் என்ன? இந்தக் கருத்துகள் அனைத்தையும் திருவள்ளுவர் கூறக் கருதினார். அவற்றைக் கூறுதற் குப் பெரிய கட்டுரை எழுதவில்லை, அன்றி, நீளம்ாக ஆசிரியப்பா பாடவில்லை. பின் என் செய்தார்? ஒன்றே முக்கால் அடியிலே ஒரு குறட்பா இயற்றின்ார். அதுதான் இது: 'கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ, இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.” - இல்லையென்று ஒருவர் சொல்லாடவும், இரப்ப்வர்க்கு உயிர் போகிறது: இல்லையென்று மறைப்பவர் உயிர் எங்கே போய் ஒளித்துக்கொள்கிறதோ தெரிய வில்லையே என்ற அளவே இக்குறட்பா ச்ொல்வது. போல மேலெழுந்த வாரியாய்ப் பார்ப்போர்க்குத் தோன்றும். ஆழ்ந்து நோக்கினால், எவ்வளவு சிறந்த நயங்களைத் தன்பால் அடக்கிக்கொண்டிருக்கிறது. "":: த துளைத்து எழுதடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என இடைக்காடனார். கூறினார் போலும் ! . X