பக்கம்:முன் பனிக் காலம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதி நூல்களில் இலக்கிய நயம் 125 உலகிற் பலருக்குப் பல தொழிலை இறைவர் பிண்டம் பிடிக்குங்காலே அமைத்திருக்கிறார் என்ற சொல்லைத் திருவள்ளுவர் கேட்டிருக்கிறார். ஒரு நாள் அவர் எதிரே ஒருவன் கனாவில் வந்தான் போலும் வந்தவன் பிச்சைக்காரன். அவன் நேற்று யாசித்தவன், மூன்றா நாள் யாசித்தவன், இன்றும் யாசிக்கத்தான் வேண் டுமோ என அஞ்சுகிறவன். ஆம், என் செய்வது, தலை யில் எழுதியவண்ணந்தானே நடக்கும். இரந்துதான் ஆகவேண்டும் என்று எண்ணினான். அதற்குள்ளாக இன்னொரு எண்ணம் அவனுக்குத் தோன்றிற்று. பாசிப் பதும் ஒரு தொழிலா ? உலகில் இன்னின்னார்க்கு இன்னின்னது. தொழில் எனப் பிரமன் வகுப்பதாக வைத்துக்கொள்வோம். அத்தொழில்களில் ஒன்றாக யாசித்தலையுஞ் சேர்த்து எண்ணினானா பிரமன் ? எண் னினான். ஆனால், அவனே அந்தத் தொழிலைக் கொஞ் சம் பார்க்கட்டும். உட்கார்ந்த இடத்தைவிட்டு அசை யாமற் படைத்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இந்த உலகிற்கு வரட்டும். வந்து தெருத்தெருவாக அல்லற் பட்டு அலையட்டும். அப்பொழுதுதான் அறிவான், இரத்தற்றொழில் எவ்வளவு இழிவானது என்பதை. இழிவானதொன்றை எனக்கும் என் போன்றவர்க்கும் ஒரு தொழிலாகப் பிரமன் வகுத்தான் என்றால் அவன் ஒரு பாபி. அந்தப் பாய்த்தால் அவின் ஒரு பிறவி எடுக் கட்டும். அப்பிறவி மானிடப் பிறவியாய் இருக்கட்டும். மானிடனாய், மானம்விட்டு, இரவலனாய் வந்து சேரட்டும். போகிற இடத்திலே உடனே உணவை-காசைப் பிச்சையைப் பெறாமல், பல வீடுகளில் பல தெருக்களில் அல்ையட்டும். அலைந்து கெட்டொழியட்டும்! இவ்வாறு அப்பிச்சைக்காரன் கருதியதாய் ஒரு கனாக் கண்டார்