பக்கம்:முன் பனிக் காலம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நீதி நூல்களில் இலக்கிய நயம் போலும் திருவள்ளுவர்! அதன் பயனாய் ஒரு குறள் எழுதினார். அக்குறள்,

  • இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்' - என்பதே, எவ்வளவு பெரிய கனாவை எத்துணைக் குறு: கிய அடிகளில் தெரிவித்துவிட்டார் : இதுதான் இலக்கிய நயம். இவ்வுலகைப் படைத்தவன் யாவனாயினும், அவன் இரத்தலையும் ஒரு தொழிலெனப் படைத்து, அத் தொழிலாற் சிலர் உயிர் வாழ்வாராக என விதித்திருப் பானாயின், அவனும் தெருத்தோறும் பரந்து திரிந்து துன்புறுவானாக எனக் கூறுகின்ற இக்குறள், இரப்பினால் வரும் அச்சத்தை எவ்வளவு கொடுமையுடையதாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது : இரத்தல் கொடிது என்ற நீதியைக் காட்ட விரும்பும் திருவள்ளுவர் எவ்வளவு சிறந்த இலக்கியமாக இவ்விரண்டடிகளை அமைத்து விட்டார் !!

சில உவமைகளைக் கையாளும் விதத்திலேயே திரு. வள்ளுவர் மிக்க நயமுண்டாகக் குறளமைத்திருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, 'அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.” என்பதை நோக்குவோம். கயவர் கீழ்மக்கள். கீழ்மக் களைத் தம்பட்டம் ஆகிய பறைக்கு ஒப்பாகச் சொன்னார். சொன்னதற்குக் காரணம் யாது? தப்பினைத் தட்டுகிறான் ஒருவன். தப்பினிடத்திலே அவன் கையினால் ஒன்றை அறிவிக்கிறான். அதனை அந்தப் பறை பலர் காதிற் சேர்க்கிறது : பல இடங்களிற் கொண்டு சேர்க்கிறது.