பக்கம்:முன் பனிக் காலம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி நூல்களில் இலக்கிய நயம் 127 அதைப் போல இரகசியத்தைப் பிறரிடம் போய்க் கீழ் மக்கள் தெரிவித்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் ஒரு செய்தி இரகசியம் என்று ஒருவனிடத்தில் தெரிவித்தார். அவன் என்ன செய்தான் தெரியுமா? அதனை மூட்டை கட்டிக்கொண்டு பலரிடம் போனான். அந்த மறை பொருளாகிய சுமையை அவனால் தாங்க முடியவில்லை. அதனால், அதைக் கொண்டுபோய்ப் பலருக்கும் பங்கு போட்டுப் பிரித்து எடுத்து எடுத்துக் கொடுத்தான். இவனை அறையறை யன்னவன் எனத் திருவள்ளுவர் கூறிய அழகு நோக்கத்தக்கது. அந்த இரகசியம் அவனுக்குப் பாரமாக இருந்தது என்பதும், அதனைக் கொண்டுபோய்ப் பிறர்க்குச் சேர்த்தான் என்பதும் உய்த்து என்ற சொல்லினாலே பெறப்படுகின்றன் 'உய்த்து’ என்ற சொல், இக்குறட்பாவிற்கு உயிர்நி அதனை எடுத்துவிட்டு, வேறு எந்தச் சொல்ை விடத்துச் சேர்த்தாலும், இவ்வளவு சிறந்து நயங்கள் தோன்ற மாட்டா. இச்சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தக்க இடம் பார்த்து வைத்த பெருமை திருவள்ளுவ ருடையது. கயவரிடம் இரகசியம் கூறக்கூடாது என்ற நீதியை எவ்வளவு நயம்படத்திருவள்ளுவர் கூறியுள்ளார்! 總 இரண்டடி அற நூலிலிருந்து இப்பொழுது நாலடி நூலிற்குப் போவோம். செல்வம் நிலைபேறுடையதன்று; அழிந்து போகுந்தன்மையது என்னுங் கருத்துடைய நாலடிப் பாட்டு ஒன்றை நோக்குவோம் ! 'அறுசுவை புண்டி அமர்ந்தில்லாள் ஊட் மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று”