பக்கம்:முன் பனிக் காலம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி நூல்களின் இலக்கிய நயம் 129 வறிஞனாய்த் திரிகிறான். இவ்வாறெல்லாம் மாறுபட வைத்துக் கூறியதற்கேற்ப, அமர்ந்து உண்டவன் சென்று இரக்கிறான் என்ற கவிஞர் கூறக் கருதியிருப்பார் என நினைக்கிறேன். இத்துணை நயம் பொதியச் செய்த கவிஞர் இன்னார் என்று அறிய வழியில்லை. அவர் இயற்றிய பாட்டு மாத்திரம், நாலடியார் என்ற நீதி நூலிலே காணப்படுகிறது. உலகிலே இச்சகம். பேசி வாழும் மாந்தருள் ஒரு வன்ைப்புலவ்ர் ஒருவர் நோக்குகிறார். ஒரு நாள் ஒருஷ் ரும் அறியாம்லே அவன் வீட்டினுள் நுழ்ைத்து அவன் செய்யவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவன். போற்றி போற்றி புண்ணியகங் போற்றி, போற்றி, போற்றி பாரியே போற்றி, போற்றி காரி, போற்றி ஓரி, போற்றி கன்னா, போற்றி பேகா? என்று என்னென்னவோ உருப்போட்டபடி இருக் கிறான். இதனை மறைந்திருந்து கவனிக்கிறார் புலவர் பிறகு அவன் வெளியே புறப்பட்டுப் ப்ோகிறான். புலவரும் பின் தொடருகிறார். புதுப் பணக்கார்ன் ஒருவன் வீட்டில் அவன் நுழைகிறான்; 'போற்றி பேர்ற்றி? என்று தொடங்கி, அடியேனைக் காத்தருள வேண்டியது ஆண்டவனை ஒத்த தங்களால்தான் இயலும் : இறைவனே அருள் புரிக தங்கள் அருள் நோக்கி வாழுகிறேன். பயிருக்கும்ை ழ, எப்படியூேர், என் போன்ற வறிஞர்க்குத் தாங்கள்.அப்படி” என்று சொல்லிப் பின்னும் பல அடுக்கத் தொடங்குகிறான். பார்த்தார் புலவர் : பாடினார் ஒரு பாட்டு. போற்றியே போற்றியே யென்றும் புதுச்செல்iம் தோற்றியார் கண்ணெலாம் தொண்டேபோல் -ஆற்றப் மு. கா.-9