பக்கம்:முன் பனிக் காலம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நீதி நூல்களில் இலக்கிய நயம் பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு’ என்பதே அப்பாட்டு. புலவர் தாம் கண்ட பெரிய காட் சியைச் சிறு பாட்டிலே அமைத்துக் கொடுத்தார். அவர் கூறக் கருதியதெல்லாம் வயிற்றை வளர்ப்பதற்காக இச்சகம் பேசித் திரியவேண்டாம்” என்பதே. அதனை எவ்வளவு அழகாக முனைப்பாடியார், அறநெறிச்சார்த் தில் அமைத்து வைத்திருக்கிறார் என நோக்குக. இச்சகம் பேசுவோன் இழிந்தவன் என்று நேரே சொல் லாமல், அவன் வயிற்றினை மகேசுவரனாக்கிப் பெருமைப்படுத்துவதுபோல் சிறுமைப்படுத்திய திறம் வியக்கத்தக்கது. வயிறாகிய, தம்பிரான் இருக்கிறாரே, அந்தக் கடவுளைக் காப்பாற்ற எத்தனை பொய்யும் புனைசுருட்டும். ஆற்றி ம்ாந்தர் வாழ்கிறார்கள் என்று கவிஞர் இவ்விடத்தில் இரங்குகிறார். இப்படிப் பொய் சொல்லியாவது வயிறு வளர்க்கவேண்டுமா என்ப் புலவர் கேட்பதுபோலத்தோற்றுகிறது. இப்படி வளர்க்கப்படும் வயிறு வயிறா, குதிரா எனப் புலவர் கேட்பதுபோலத் தோற்றுகிறது. வயிற்றுச்சாமியை நம்பி உண்ம்ைக் கடவுளை மக்கள் விடுகிறார்கள்ே எனப் புலவர் கலங்குவதுபோலத் தோற்றுகிறது. இத்துணை நயம்பட 'வயிற்றுப் பெருமான் ப்ொருட்டு’ என்ற ஒரு தொடரால் எவ்வளவு அரிய பெரிய நீதிகளைக் அறநெறிச்சாரச் செய்யுள் காட்டுகிறது. எனவே, அற நூல்கள் சிலவும் மிக்க இலக்கிய நயமுடையனவாகத் திகழ்கின்றன என்பதை ஒருவாறு கண்டோம்.