பக்கம்:முன் பனிக் காலம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. புலவர் மகளிர் சிலர் பழந்தமிழ் நாட்டிற். பெண்பாலாரும் ப்லர் புலவ ர்ர்ய் விளங்கியது பழந்தமிழிலக்கியங்களால் அறியப் படுகிறது. அவருட் சிலரைப்பற்றி அறிய முற்படு வோம்: காக்கையைப்பற்றித் தமது பாடலிலே பாடிய சிறப்பினால் பெண்மணியார் ஒருவர் காக்கை பாடி ரியார் என்று பெயர் பெற்றார். அவர் கர்க்கையை எப்படிச்சிறப்பித்தார் எனப் பார்ப்போம். தலைவன்க் ஒருவன் பொருளிட்டும் பொருட்டுத் தன் மனைவியை பிரிந்து போனவன் இப்பொழுது திரும்பி வந்திருக்கிறான்.அவன் தோழியைப் பார்த்து, நான் பிரிந்த பொழுதுவதன்லவியை ஆற்றுவித்துக்கொண் டிருந்ததற்காக மிக்க நன்றியுடையேன்” என்று சொல்ல, அவள் காக்கை கரைந்தது. அதனால்தானே. நீ வருவாய் என்று சொல்லி நான் ஆற்றுவித்தேன். காக்கைக்கே கடப்பர்டுடையேம். நல்ல பசுநெய் யோடு வெண்ணெல்லால் ஆகிய சுடுசோற்றை ஏழு பாத்திரத்திலே எந்தித் தலைவி காக்கைக்குக் கொடுத் தாலும் அது பெரிய கைம்மாறாகாது” என்று கூறு கிறாள். இப்படிக் கூறியதாகப் பாட்டு ஒன்று இயற் றிய காரணத்தால், நச்செள்ளையர் என்னும் புலவர் காக்கைப்ாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப் பட்டு, நாளடைவிற் காக்கைபாடினியார் என்றே வழங்கப்படுவாரானார். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் அரசனைக் குறித்துப் பாடிய பத்துப் பாடல்களுக்காக