பக்கம்:முன் பனிக் காலம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புலவர் மகளிர் சிலர் அவனது வண்மையைப் பாராட்டியது போலவே வீரத்தையும் பாராட்டியுள்ளார். பாண்மகளைப் பார்த்துக் கூறுவார் போலப் பின்வருமாறு சொல்லுகிறார். 'அவனுடையசேனை பகைவரை அழிக்கச் சென்றுள்ளது. இப்பொழுது அவன்போர் குறித்து வேறொரு நாட்டிற்குப் போகவில்லை. ஆனால், பேர் குறித்து எப்பொழுது, எவ்விடத்திற்கு அவன் எழுவான் என்பது நமக்குத் தெரியாது. ஆதலால், அவனைக் காண விரைவில்ே ப்ோவ்ோம்.போனால், குறைவின்றிக் கொடுப்பர்ன். இக் கருத்தை அடிக்கி, மூன்று சிறு அடிகளிலே காக்கை பாடினியார் பாடியுள்ளது மிக்க அழகுடைத்து. கொலைவினை ம்ேவற்றுத் தானை, தானே இகழ்வினை.மேவலன், தண்டாது.iசுப செல்லா ம்ோதில் பாண்மகள் காணியர்” என்றதை நோக்குக. சகையிற் சிறந்தோனும் வீரத்தில் மிக்கோனுமாகிப் சேரலாதன். என் இரக்கும் இடத்தையும், தன் வீரம் பயனின்றி நிற்குமிடத்தையும் நாம் கண்டால் வியப்புற்றுச் சிரிக்கம்ாட்டோமா? அவ்விடத்தை நமக்குக் காட்டும் காக்கைபாடினியர்ர்பாவின் திற்ம் வியக்கத்தக்கது. அவர் அவன்ைப் பார்த்துக் கேட்கிறார். நீ துணங்கைக் கூத்தாடி, அக்கூத்திற் பிற மக விருக்குத் தலைக்கை தந்து வீடு திரும்பி வந்ததும், உன் மனைவி ஊடிஉன் மீது எறியக் கருதி எடுத்த சிறு செங் குவளைமலரை ‘ச்‘ என்று சொல்லி, இரந்தும் பெறமாட் டாய். அதனை அவள் கையினின்றும் பெயர்க்க முடியாத நீ பகைவர் மதில்க்ளைக் கைப்பற்ற வல்லாய் ஆனது எப்படி?’-இவ்வாறு பழிப்பார்போலப் புகழ்ந்து, இப்