பக்கம்:முன் பனிக் காலம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 38 புலவர் மகளிர் சிலர் பெய்யவே முல்லைக் கொடிகளும் வரிசை வரிசையாக முகையாகின்றன. முல்லை முகை ஆகிய பற்களால் கார் காலமாகிய பெண் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். இவ்விடத்து மீள்வேன் என்று சொன்ன தலைவர், இப் பொழுது எவ்விடத்துள்ளாரோ என என்னைப் பார்த்து நகையாடுகிறாள் அப்பெண். இளமை அதிக நாள் தங்கி பிராது என்பதைக் கருதாமலும், பொருள் வளத்திலேயே விருப்பமுற்று, அதனையே பெரிதாகக் கருதியுஞ் சென்ற் என் கணவர் எவ்விடத்திலுள்ளாரோ என்று நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தக் காராகிய மகள் வேறு சிரிக்கிறாள். என் செய்வேன் தோழி’ எனப் பாடியது போல உளது அப்பாட்டு, "இளமை பாரார் வளம்ந்சைஇச் சென்றோர் இவனும் வாரார் எவன ரோவெனப் பெயல்புறத் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயி றாக நகுமே தோழி நறுந்தண் காரே' என்ற ஐந்தடிப் பாட்டிற் கார்காலத்தை ஒரு பெண்ணாக வைத்து, அக்காலத்து முல்லை பரும்புகளை அப்பெண் ணின் பல்லாக உருவகித்து, அவை மலர்வதைச் சிரிப்ப தாக வைத்துப் பேசிய மாசாத்தியார் மதிநுட்பம் போற்றற்பாற்று. பிறர் சொன்னபடி நிகழாவிட்டால், அச்சொல்லில் நம்பிக்கை வைத்தவரைப் பார்த்து நகைப்பதென்பது உலகிற் பொதுவாக எல்லாரிடத்திலுங் காணப்பட்டாலும், பெண்டிரிடத்திற் சிறப்பாகக் காணப்படும். மகளிர் பிறர் வருந்தும் பொழுதும் அவரை இடித்துக்காட்டி நகையாடும் இயல்பு சில பெண்டிர்க்குண்டு. இவ்வியல்பை உள்ள