பக்கம்:முன் பனிக் காலம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புலவர் மகளிர் சிலர் 'களியியல் யானைக் கரிகால் வளவ, சென்றமர்க் கடந்தகின் ஆற்றல் தோன்ற வென்றோய் ! கின்னினும் நல்லதன் அன்றே, கலிகொள் பாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி, வடக்கிருந் தோனே.” மாறோக்கத்து நப்பசலையார் என்னும் அம்மை யாரும் நய்ம்படப் பாடும் இயல்புடையவராகக் காணப்படு கிறார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் சிறப்பைக் குறித்துப் பாடத் தொடங்கி, அவர் அவனை எப்படிப் பாடுவது எனக் கேட்கிறார். கருத்து, அரசர் கட்டளைப்படி புலவர் பாடுவார் என்பதன் து. ஆனால், அவனுடைய கொடைத்திறம், வீரம், நடுவுநிலைமை என்பவற்றுள் எதனைப்பற்றிப் பாடுவது எனவே அவர் அறிய விழைவது; அவன் சகையைச் சிறப்பிப்பதெனின், புறாவின் துயர் நீக்கத் தன்னையே கொடுத்த சிபி மரபில் அவன் வந்தோன் ஆதலின், ச்கை அவன் புகழ், ஆகாது. அவனுடைய வீரத்தைப் புகழ்வதெனின், விண்ணில் தொங்கிக் கொண்டிருந்த மதில்களை உடைய பகையரசர் பலரை அழித்த செம்பியன் மரபில் வந்தவன் ஆதலால், பகை வரை அழித்தலும் அவன் புகழ் ஆகாது. அவனுடைய நீதி முறையைப் புகழ்வதெனின், சோழருடைய உறை யூரில் அறம் என்றும் நிலைபேறுடையது ஆதலின், முறைமையும் அவன் புகழ் ஆகமாட்டாது. எனவே, எப்படி அவனைப் புகழ்வது என்று அறியாதவர் போலக் கேட்கிறார் அப்புலவர். அங்ஙனம் கேட்கும்பொழுதே அவனைப் புகழ்ந்ததோடு அவனுடைய மூதாதையரை யும் புகழ்ந்த நயம் வியக்கத் தக்கது. அவனும் அவ்ன்