பக்கம்:முன் பனிக் காலம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& முன்பனிக் காலம்

  • செங்கிற அழலும் ஒண்கதிர் விளக்கமும்

இருளினை போட்ட இயைந்தே நிற்பன” என்றவாறு மொழிந்தார். காளிதாசரும் இருது சம்ஹாரத்தில், இப் பருவத்தை வருணிக்கின்றவர், மக்களுக்கு ஒண்தழலில் உள்ள விருப்பத்தையும், பக லில் வெளியே செல்ல வேண்டுபவர்க்கு ஞாயிற்றி னிடத்திலுள்ள அவாவினையும், பனியினின்றும் பாது காக்கும் பொருட்டு வெப்பத் துளிகளின்பால் உள்ள விருப்பத்தையும் குறிப்பிட்டுள்ளார். முன்பனிக் காலத் தின் தன்மை யாண்டும் ஒரே விதம் என்பதை இக் கவிஞர்கள் சொற்களால் நாம் அறியலாம். வெயிலிலும் வெப்பத்திலும் இப் பருவத்தே விருப்பமுள்ள நமக்கு வெந்நீரிலும் விழைவு ஏற்படு தல் இயல்பன்றோ? வெந்நீரைத் தாங்கும் குப்பிகளை (Thermos flasks) நாம் இப்பொழுது பெற்றிருக் கிறோம். அவை நம் தமிழ்நாட்டிற்குப் புதியன அல்ல போலும்! 1,800 ஆண்டுகட்கு முன்னே நம் நாட்டில் அவை இருந்தன என்பதற்கு வேண்டிய சான்று: குறுந்தொகைப் பாடலிற் கிடைக்கிறது. எஅச்சிர வெப்ப வெப்பத் தண்ணிர்ச் சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே’ என்று வந்துள்ள பாட்டில், வெப்பத் தண்ணீர்ச் சேமச் செப்பு’ என்று கூறப்பட்டிருப்பது வெந்: நீரைச் சூடாகவே பாதுகாத்து வைக்கும் கலம் என்று சொல்லத்தக்கது. முன்பனிக் காலத்தில், 'அச் செப்பி லிருந்து சுடுநீரைப் பெறுக’ என்று வாழ்த்துகின்றன 'ஓரிற் பிச்சையார்’ என்னும் புலவரது பாட்டில் இங்ங்னம் வத்துள்ளது.