பக்கம்:முன் பனிக் காலம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் மகளிர் சிலர் 143 முன்னோரும் ஈகையிற் சிறந்தோர் என்பதையும், பகை வரை அழிக்கும் ஆற்றல் நிரம்ப உடையவர் என்பதை நீதியும், தவறாது செங்கோல் நடாத்தியவர் என்பதையும் ஒருங்கே வைத்துக் கூறிய திறத்தை நினைக்க நினைக்க இன்பம் பெருகுகிறது. வேறு அரசர் குடியில் தோன்றிய சிலர் தத்தம்பரம்பரையோர் செய்தபெருஞ்செயல்களைப் பேசிக்கொண்டிருந்து வாழ்நாளை வீணாளாக்குவர். அங்ங்னமன்றி, நின் குடியின் பழம் பெயர்க்கு ஏற்ப, சகையும் வெற்றியும் நீதியும் உடையோய்” என்று வாழ்த்தாமல் வாழ்த்திய அப்புலவர் வாக்கு நோக்கத் தக்கது. கோல்கிை ற துலாஅம் புக்கோன் மருக! ஈதல்கின் புகழும் அன்றே, துரங்கெயில் எறிந்தகின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல்கின் புகழும் அன்றே கெடுவின்று. மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற்று ஆகலின், அதனான், முறைமைகின் புகழும் அன்றே, கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ யாங்ங்னம் மொழிகோ யானே!" என்று பாடியபொழுது, "உனது குடியில் முன்னர்ப் பிறந்த சிலர் தம் வாழ்நாளில் அரியது பெரியது ஒன் றுஞ் செய்யாது அகன்றது போன்றல்லாமல் குடி யின் பெருமையை உன் காலத்தில் நிலைநிறுத்திய பெரியோய்!” என அப்புலவர் புகழாது புகழ்ந்தவரா னார். 'வண்மையுடையோர் வழியில் வந்த எழு தல்ை முறையோர் விண்ணுலகெய்துவது திண்ணம்’ என நம்பி சயாது இருப்போர் எத்தனை பேர்? வெற்றியிற்