பக்கம்:முன் பனிக் காலம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44. புலவர் மகளிர் சிலர் சிறந்த வீரர் குடியில் தோன்றும் மக்கள் மூன்று தலைமுறையினர் வீர. சுவர்க்கம் பெறுவர் . என்று நம்பிக் கோழைகளாக இருப்போர் எத்தனை பேர்? நீதி நெறி தவறாத ஒருவன் வழியில் வந்த பத்துத் தலை முறையோர் அநீதியே செய்யினும் மேலுலகம்.அடை வர் என நம்பிக் கெடுவோர் எத்தனை பேர்? அவரை யெல்லாம் போலன்றி, தான் தான் செய்தது தனக் காகுமென்று நம்பிக் கொடையும் கொற்றமும் கோல் கோடாமையும் உடையை ஆயினை நீ வாழ்வாயாக!” என்று அப்புலவர் புகழ்ந்ததாக்வும் கொள்ள இடம் உண்டு. இவ்வளவு அழகுள்ள பாட்டுப் பாடுதல் என்பித் சிலருக்கே இயலும். வீரத்தாலும் கொடையாலும் இத்துணைச் சிறந்த மன்னர் இறந்தபொழுது அப்புலவர். FAL! பாட்டு ஆற்றல் மிக்கதாப் விளங்குதல் எதிர்ப்ார்க்கத் தக்க தன்றே: யமன் அச்சுறுத்தியோ, தனது ஆற்றலைக் காட்டிலோ கிள்ளி வளவனது உயிர்ைக் கொண்டு போயிருக்க முடியர்து. பாடுபவர் போன்ற் தோற் றத்தை எடுத்துக்கொண்டு, எதிரே சென்று, கையி னால் தொழுது, எத்தி, இரத்துதான் உயிரை வாங்கிக் கொண்டு போயிருக்கவேண்டும் என்று அப்புலவர் சொல்லி இருக்கிறார். இதனாலே, சோழ மன்னன் ஆற் றலின் எதிரே கூற்றுவனும் அஞ்சுவான் என்பதைக் குறிப்பித்தார். போற்றவும் போகான்,. பொருளொ டும் யோகான் என்று சொல்லப்படும் கூற்றுவன், வளவனைப் போற்றி அவன் உயிரைப் பிச்சையாக வாங்கிப் போனான் என்று புலவர் குறிப்பித்தார். யமன் தன் வடிவில் தோன்றி இருப்பானேயாகில்,