பக்கம்:முன் பனிக் காலம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 புறநானூறும் கலைகளும் சங்க நூல்களில் ஒன்றாகிய புறநாற்றில் ஒரோ வோர் இடத்திற் கலைகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இசை : அக்காலத்துத் தமிழ்மக்கள் இன்னிசையில் மிக்க பயிற்சியும் பற்றும் விருப்பமும் உடையராய் இருந்தனர் என அறிகின்றோம்; யாழ், குழல் முதலிய இன்னிசைக் கருவிகளை இயக்கி இன்பம் துய்த்தார் என அறிகின்றோம். இன்னிசை இயக்குவதாற் பேய்களை வெருட்ட முடியும் என்பதை அறிந்திருந்தார்கள் எடுத்துக் காட்டாக, வீரன் ஒருவன் போர்க்களத்தில் மார்பிற் புண் பட்டானாக, அப்புண்ணை உண்ண வரலாகும் பேய் களைத் தடுப்பான் கருதி, காஞ்சிப் பண்ணைப் பாடி வாழையும் குழலையும் இயக்குவோம் என்று சொல்லித் தலைவி தோழியை அழைப்பதுபோன்று அமைந்த பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது. "இசைமணி எறிக்இ! காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிகறை புகைஇக் காக்கம் வம்மோ காதலங் தோழி : வேந்துறு விழுமங் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் கெடுந்தகை புண்னே’’ (புறம் : 281) என்ற ததியில் இது சொல்லப்பட்டுள்ளது.