பக்கம்:முன் பனிக் காலம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 149 வீரன் இன்னொருவன் அரசனாற் பெருஞ்சிறப்புச் செய்யப்பெற்றவன், போர்க்களத்தில் சர்தல் விருப் பத்தோடு சென்றவன், இப்பொழுது மார்பில்ே,புண்பட்டு வீழ்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிப் பறவைகள் பல வட்டமிடுகின்றன. நரியும் வரும்போலத் தோற்றுகிறது. அவன் , பறவைகளாற் பற்றப்படாமலும் நரியாற் கவரப் படாமலும் இருக்கும்பொருட்டு இன்னிசை இயக்குக என நெடுங்கழுத்துப்பரணர் என்பார் பாடினார். சிேறாஅஅர் துடியர்: பாடுவன் மகாஅஅர்; துவெள் அறுவ்ை மாபேர்ற் குறுகி இரும்புட் பூச்ல்"ஒம்ப்மின் யானும் *விளரிக்கொட்பின் வெள்கரி கடிகுவென்" - (புறம் :291) என்று கூறியவிட்த்து, சிறுவரையும் துடியரையும் பாடுதலில் வல்ல மக்களையும் அழ்ைத்துத் தலைமகனைப் பறவைகளினின்றும் பாதுகாக்கும்படி சொல்லுகிறார். விளரி என்னும் இரங்கற்பண்ணைப் பாடி, அங்கே வரும் நரியை ஒட்டுவேன் என்றுஞ் சொல்லுகிறார். அவ்விரங்கற் பண்ணைப் பருந்தின் சுழற்சியைப்போல வட்டமிட்டுப் பாடுவதால் நரிகளை ஒட்ட முடியும் என்று அக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். - இத்தகைய இன்னிசைகள் இல்லாவிடங்களில் கொடிய முரசு ஆர்க்கும் இடங்களில், பருந்துகள் மிகப் பலவாய்வந்து வட்டமிட்டு, புண்பட்ட வீரர் மார்பை அவர்தம் மனைவியர் மு ய ங் க இடங்கொடாது மொய்த்தன என்பது கழாத்தலையார் ப்ாடிய செய்யுள் ஒன்றால் விளங்குகின்றது.

  • விளரிக் கொட்பின் - விளரிப்பண்ணின் சுழற்சியால்.