பக்கம்:முன் பனிக் காலம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புறநானூறும் கலைகளும் யாழ், குழல் முதலிய இன்னிசைக் கருவிகளாலும் வாய்ப்பாட்டாலும் மக்கள் இன்பம் துய்த்ததேயன்றி, பேய் பிசாசுகளை ஒட்டவும் அறிந்தார்கள் என்பது இவற்றால் அறியப்படுகிறது. பேய்களை ஒட்டுதற் குரிய உச்சாடனம்’ என்பது ஒரு கலை. இசைக் கலை யில் வல்ல தமிழர் அக்கலை துணையாகவே மற்றொரு கலைப்ாற் பெறலாகும் பயனையும் பெற்றிருந்தார்கள் என்பது இதனால் அறியக்கிடக்கிறது. அக்காலத்தில், இசைக்கலையில் வல்லுநரை ஆத ரித்தோர் பலர். அரசர் முதலானோர் பாணர்க்குப் பொன்னாலாகிய தாமரைப் பூ வெள்ளிநாரால் தொடுத்த தனையும், பாடினிக்குப் பொலங்கலன்களையுங் கொடுத் துச் சிறப்புச் செய்தனர். எடுத்துக்காட்டாக, பாட வல்ல பாணன் ஒருவனை நோக்கி, கின் புடினி மாலை யணிய வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே’’ - - (புறம் : 319) என் ஆலங்குடி வங்கனார் உரைத்ததைக் கூறலாம். “மறம் பாடிய பாடினி யும்மே, சீருடைய விழை பெற்றிசினே ...........பாண் மகனும்மே, ஒள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே' (புறம் : 1.1) எனப் பேய்மகள் இளவெயினியார் இயம்பினார்.

  • வாடாத் தாமரை - பொன்னாலான தாமரைப்பூ.