பக்கம்:முன் பனிக் காலம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 15 I தமிழ்ப் பெருவேந்தர் மூவரும், சிற்றரசரும், செல் வர் பிறரும் பாடவல்ல ஆடவரையும் பெண்டிரையும் பாதுகாத்து வந்தனர். அவருக்கெனப் பரிசிலாக நாடுகளையும் ஊர்களையும் கொடுத்த வள்ளல்களிற் பாரி தலைசிறந்தவன். அவனை இகலில் வெல்லுதல் என்பது மூவேந்தர்க்கும் அரிது என்றும்; அம்மூவரும் ஆடல் வல்லாராய்ப் பாடல் வல்லாராய் வரின் பாரி யின் பறம்புநாட்டைப் பெறுதல் எளிது என்றும் கபிலர் கூறியிருப்பது பலர் அறிந்ததொன்று: 'ஆடினிர் பாடினிச் செலினே * * * நாடுங்குன்றும் ஒருங்கி யும்மே." (புறம் 199) கோப்பெருஞ்சோழன் பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பேரன்போடு கொடுத்தர்ன் என்ற இச்ை திச்ைப்ெங்கும் பரவியிருந்தது. இவன் இறந்தான் என்பதைக் கண்ட புலவரொருவர் (பொத்தியார்). அவனுயிரைக் கொண்டு போன கூற்றுவினை வைவோம், வாரீர் புலவீர்.என்று அழைத்த செய்தி, - "பாடுநர்க் கீத்த பல்புக முன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பினனே, அனையன் என்னாது அ த்தக் கோனை கினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று வைகம் வம்மோ, வாய்மொழிப் புலவீர்” (புறம்: 221) என்றவாறு உரைக்கப்பட்டுள்ளது. நம்பி நெடுஞ்செழியன், பாண் உவப்பப் பசி தீர்த்தனன்”, எனப் பரவப்படுகிறான். சேரமான் வஞ்சன் பாணர் சிறிது இன்னிசை இயக்கியவுடன் பெரிதுவந்து, விரும்பிய முகத்தனாகி, அவர் அரையில்