பக்கம்:முன் பனிக் காலம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக் காலம் g" அன்றி, இக் காலத்தில் மக்களுக்குக் கார்ப்புப் பொருந்திய இஞ்சியிலும், பொரி, அவல் முதலியவற்றி லும் விருப்பம் நிரம்ப உண்டு. இவற்றைத் தின்று குளிர்ச்சி பொருந்திய சண்பக மலரை வெறுத்து, மல்லிகை மாலையை மகளிர் சூடினார்களென்று சீவக. சிந்தாமணியுட் சொல்லப்பட்டது.

  • அளித்த தீம்பழ மிஞ்சி யார்ந்தர்ே

விளைந்த வல்விளை வரிசி வேரியும் வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பகம் உளைந்து மல்லிகை யொலியல் சூடினார்” என்றதைக் காண்க. - மார்கழியுந் தையும் முன்பனிக் கால மாதங்கள் என்பது முன்னரே கூறப்பட்டது. இம் மாதங்களில் விடியற்காலை வேளையில் நீராடுதல் பண்டைக்காலத்தில் பெருவழக்கிற்றாக இருந்தது. இப்பொழுது மார்கழித் திங்களில் விடியுமுன் மக்கள் பலர் நீராடிக் கோயில் சென்று வழிபடுகின்றனர். ஆனால், தைத்திங்களில் முற்காலத்தில் வழங்கிய வழக்கம் கைவிடப்பட்டது. 1,800 ஆண்டுகளுக்கு முன்னே கன்னிப் பெண்களாய் இருந்தவர்கள் தைத் திங்களில் தத்தம் தாய்மார் அருகே நின்றுகொண்டு நோன்பு செய்யும் முறையைக் காட்ட, யாற்றிலுங் குளத்திலும் காலை நேரத்தில் நீராடுவர் என்றும், அந் நோன் பின் பயனாய்த் தக்க கணவரைப் பெற வேண்டுவர் என்றும் அறிகின்றோம். இச்செய்தி,

  • தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல் ” என்று பரிபாடலுட் குறிக்கப் பெற்றுள்ளது.