பக்கம்:முன் பனிக் காலம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

յ さ புறநானூறும் கலைகளும் பாணர் சிலர் ஒருவரிடத்தே பற்றுடையவராகி விட்டால் பின்னர்ப் பிறர் எவரிடத்திலுஞ்சென்று தம் கலைத்திறத்தைக் காட்டிப் பரிசில் பெறும் விருப்ப மின்றி வாழ்வாராயினர். 'யானே பெறுகஅவன் தாள்நிழல் வாழ்க்கை அவனே பெறுகஎன் நாவிசை சதுவறல்’ (புறம்: 379) என்றார் ஒருவர். கலங்கிள்ளி நசைப்பொருநரேம் பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்" (புறம்: 382) என்றார் இன்னொருவர். பிறரிடத்திற் சென்று ப்ரிசில் வேண்டாத அளவு நிரம்ப நிரம்பக் கொடுக்கும் பெற்றியாளர் பலர் இருந் ததாலும், பெற்றது போதும் என்ற பொற்புடை மனம் படைத்த இசைஞர் பலர் இருந்ததாலும், இந்நிலை யினின்று வழுவாது இசைஞர் இருத்தல் இயன்றதென்க. பெற்றது கொண்டு மகிழ்ந்து பேராசையின்றி இசைஞர் வாழ்ந்ததால், இசைக்கலை பெருங்கலையாக வளருதற்கு வாய்ப்பு இருந்தது. பெருங்களிறும் வெஞ்சின வேழமும் நாடும் ஊரும் பரிசிலாகப் பெற்ற பாடுநர் சிலரே. உண்டியும் உடையும் உறையுளும் அணிகலனும் பெற்று மகிழ்ச்சியுற்றுக் கலையை வளர்த்தோரே பலர். வீரர் சிலர் இசைவல்லுநர்க்குக் கொடுக்காத மன்னர்மேற் படையெடுத்துச் சென்று வென்று அவரைக் கொடுக்கும்படி செய்தனர் எனின், அவ்வீரர்க்கு இசைக் கலையில் உள்ள ஆர்வம் அளவிடற்பாற்றோ? அவ்

  • துவறல் - (துவல்-தல்) சொல்லுதல்.