பக்கம்:முன் பனிக் காலம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 155 வீரருள் ஒருவன் அதியமான் மகன் பொகுட்டெழினி என அறிகிறோம். யாழிசை கேட்போர் தலையை யசைத்துக் கேட்பது வழக்கம் என்றும், மத்தளத்தின் இன்னிசையைக் கேட்ட மறவர் வென்றி கொள்ளும் வேட்கையை புடையவராய்ப் போர்க்களஞ்செல்வர் என்றும் புறநானூற்றுச் செய்யுள் களால் அறிகிறோம். காட்டியம் நாட்டியக் கலையை அக்காலத்து வள்ளல்கள் ஒம்பினார்கள் என்பதற்குச் சான்று பாரியைப்பற்றியும், கோப்பெருஞ் சோழனைப்பற்றியும் பாடப்பட்டுள்ள செய்யுள்களில் அமைந்துள்ளது. 'ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீயும்மே” என்றதையும், 'ஆடுநர்க் கீத்த பேரன் பினனே' என்றதையும் நினைவுகூர்க. "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்தோன்” எனப் பாண்டியன் ஒருவன் (புறம் :9) புகழப்படுகிறான். வயிரியர் என்பார் கூத்தர். கூத்தாடுவோர் கொள்ளுங் கோலத்தைக் களைந்து மாறி மாறி வருவதுபோல, இவ்வுலகில் உள்ளோரும் செத்துப் பிறந்து மாறி மாறி வருவதுண்டு என்பது ஒரு பாட்டிற் சொல்லப்படுகிறது. அங்ங்ணம் கூறுவதற்கு, அக்காலத்தே கூத்தர் உளராதலும், அவர்தம் கூத்துக் கோலத்தைக் கண் துய்த்தோர் உளராதலும் வேண்டும்.