பக்கம்:முன் பனிக் காலம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 157 என்று ஒர் இல்லம் பேசப்படுவதால், சித்திரம் உண்டு என்பதும், அதைத் துய்க்கும் பெற்றியாளர் உண்டு என்பதும் பெறப்படும். 'ஒவத் தன்ன இடனுடை வரைப்பு” என்றார் மாற்பித்தியார். ஒவியம் வீட்டைப் போலவே இருக்கிறது என்று சொல்லக்கூடிய காலங் கழிந்து, வீடு ஒவியத்தைப் போல இருக்கிறது என்று சொல்லக்கூடிய காலம் ஏற்படுதற்கு நீண்ட இடையீடு வேண்டும். ஒவியத்திற் பழகிப்ப முகி, அதனைச் சுவைக்கும் பக்குவம் அடை ந்த பிற்பாடுதான் ஓவியத்தைப் போல வீடு இருக்கிறது என்று சொல்லுதல் இயலும். இதனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர் ஓவியக் கலையில் மிக்க தேர்ச்சிபெற்றவர் என்பது பெறப்படும். படைக்கலப் பயிற்சி வில் வித்தை என்னும் கலையில் தமிழர் மிக்க தேர்ச்சி பெற்றவர். என்பதைக் காட்ட , சண்டொரு . . " செய்தி குறிப்பிடுவேன். வில்வீரன் ஒருவன் அம்பு தொடுத்தான். அவ்விம்பு யானையைக் கீழே வீழ்த்தி, புலியைக்கொன்று, கலைமானை உருட்டி, பன்றியை வீழச் செய்து, புற்றிலே உள்ளே.-டும்பிற் சென்று செறிந்தது. யான்ை, புலி, கலைமான், புன்றி, உடும்பு என்றிவற்றை முறைமுறையே வீழ்த்தும்படி ஒரே அம்பினை எய்வது என்றால், எத் துணைத் திறமை வேண்டும் அத்துணைத் திற்ம்ை பெற்ற வேட்டுவர் தமிழ்நாட்டில் உண்டு. இவ்வாறு வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்த ஓரி என்பானைக் குறித்து வன்பரணர் பாடிய பாட்டிலே,