பக்கம்:முன் பனிக் காலம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f さ 3 புறநானூறும் கலைகளும் 'வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி' பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புகற்றலைப் புகர்க்கலை யுருட்டி, உரற்றலைக் கேழற் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலப்படுத் திருந்தோன்' (புறம்: 152) என்று கூறினார். போர்க் கலை போர்க்கலையிலே தமிழர் சிறந்தவர் என்பது யாவரும் அறிந்தது. போர் என்றவுடனே விருப்ப மிக்குடையராய் வீரர் எழுவர் என்பது: ' போரெனிற் புகலும் புனைகழல் மறவர், காடிடைக் கிடந்த காடுகனி சேனப் செல்வேம் அல்லேம் என்னார்’ (புறம்: 31} என்றவிடத்துக் கோவூர் கிழாராற் கூறப்பட்டது. காடு இடையதாகக் கிடந்த பகைநாடு மிக்க தொலையில் உள்ளதாற் போருக்குப் போகமாட்டோம் என்று சிறிதும் நினையாமல், போரென்றவுடனே விருப்பத்துட்ன் எழு கின்ற வீரரைச் சோழன் நலங்கிள்ளி பெற்றிருந்ததாக அப்பாட்டுக் கூறுகிறது. போருக்குப் புறப்படும் தறு வாயில், அமைதி பேசிப் போர் நிறுத்தப்படுவதாயின், மகிழும் வீரர் பலர் இக்காலத்து உளராக, அக்காலத்திற் சந்து செய்வித்துப் போர் நிறுத்தப்படுமாயின் மகிழ்ாது சாத்துயர் அடையும் வீரர் தினவு கொண்டு தோள் தட்டுவர் என்று சொல்லப்பட்டிருக்கிறார். 1. பகழி - அம்பு 2. உழுவை - புலி, 3. பெரும்பிறிது உறீஇ - சாகச்செய்து 4. புழல்தலை - துளை பொருந்திய கொம்பினையுடைய தலை.