பக்கம்:முன் பனிக் காலம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்கானு றும் கலைகளும் 1.59 'உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்டகைக்கு ஏவான் ஆகலிற் சாவ்ேம் யாமென - நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப” (புறம்: 68} என்றதனால், அக்காலத் தமிழ் வீரர்க்குப் போரின்கண் இருந்த விருப்பமும் இறப்பதன்கண் அச்சமின்மையும் புலப்படும். எதிர்த்து வரும் வீரர்க்கு அஞ்சாமல், மேன் மேலும் மண்டும் வீரர் மலிந்த நாடு தமிழ்நாடு. அடிக்கிற கோலுக்கு அஞ்சாமற் பாம்பு மேன்மேலும் மண்டி வருதலைப்போல எதிர்த்து வரும் வீரரைப்பற்றி, 'எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவல் மள்ளரும் உளரே” என்றவிடத்துப் புலவர் ஒருவர் சொல்லியுள்ளார். முதுகு காட்டி ஓடுவாரை மக்கட்பதடி என்றே கருதினர். மார்பிலல்லாமல் முதுகிலே புண்பட்டவர்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரைவிட்டார்கள். படைக்குப் பிந்து, பந்திக்கு முந்து” என்ற வழக்கு அக்காலத்து இருந்திலது. அம்பும் வேலும் நுழையும் போர்க்களமெல்லாம் விரும்பி ஏற்ற வீரர் பலர் இருந்தார்கள்; அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் தானிற்கு மன்னே’ (புறம் : 235) என்றதைக் காண்க. மயிற்றோகையாலும் மாலையாலும் அணி செய்யப் பட்டு, நெய் தடவப்பட்ட ஆயுதங்கள் உள்ள படைக்கலக் கொட்டிலை உடையோர் மிக்கோர் என மதிக்கப்படாது, போரிற் பயன்பட்டுப் பகைவரைக் குத்தியழித்துக் கங்கும் நுனியுஞ் சிதைந்து, கொல்லன் உலையிற் செப்பனிடப்படும் பொருட்டு வந்து கிடக்கும் படைகளை உடையாரே சிறந்தோர் எனக் கருதப்பட்டனர்.