பக்கம்:முன் பனிக் காலம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புறநானூறும் கலைகளும் அறநூல் புறநானூறு ஓர் அற நூல் என்னலாம். அது கல்வி கற்பதனால் ஆகும் நன்மையை, 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும். பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்ற இடத்துச் சொல்கிறது. செய்ந்நன்றியறிதல் ஆகிய பேரறத்தை, கநிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்ல்ென அறம்பாடிற்றே ஆயிழை கணவ' என்ற இடத்தில் வற்புறுத்துகிறது. 'வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன் மெய்கூறுவல்’ என்ற இடத்து வாய்மையாகிய விழுமிய அறம் பாராட்டப் படுகின்றது.

செல்வத்துப் பயனே ஈதல்,

துப்ப்பேம் எனினே தப்புரு பலவே” என்று சொல்லும் ஒரு பாட்டு.

வரிசை யறிதலோ அரிதே, பெரிதும்

ஈதல் எளிதே' எனப் பகரும் இன்னொரு பாட்டு.

ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்று பேசுகிறது பிறிதொரு பாட்டு.