பக்கம்:முன் பனிக் காலம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் 163 அரசன் குடிகளைத் தன் குழந்தைகளைப் போலக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்ற அறம், 'காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி' என்ற இடத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அரசனுடைய பாதுகாவல இல்லாவிட்டால் மக்கள் பொருளையும் ஒழுக்கத்தையும் இழக்க் நேரிடும் என்று கண்டறிந்த தமிழர் அரசனைச் செங்கோலினனாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தினர். மாதவர் நோன்பிற்கும் மடவார் கற்பிற்கும் காவலன் காவல் இன்றியமையாதது என்று கருதினர். நெல்லும் நீரும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா ஆயினும், அரசாட்சி அறம் உடைத்தாய்க் காப்புச் செய்த வழியே அவை பயன்படுமாதலின், "கெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்: அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று அறிவுறுத்தக் காண்கிறோம். நாற்படையின் பெருமையால் வெற்றி பெறலாம் என்று கருதிய காவலரை நோக்கி,

  • நான்குடன் மாண்ட தாயினும் அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்று சொல்லி, நடுவு நிலைமையினின்று வழாது இருக் கும்படி துரண்டுகின்ற செய்யுளையும் காண்கின்றோம். இன்னோரன்ன செய்திகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் புறநானூறு அறநூற்கலை மலிந்த இலக்கியம் என்பது எளிதில் அறியப்படும்.