பக்கம்:முன் பனிக் காலம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. நாடும் நகரமும் பழங்காலத் தமிழகம் என்றவுடனே, ஆயிரத் தெண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்பது அறியப்படும். அ க் கால த் தமிழ்நாட்டைப்பற்றிய செய்திகள் கடைச்சங்க கால இலக்கியம் எனக் கூறப் படுவனவற்றுள் குறிக்கப்பட்டுள ; சிறப்பாக, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் ஆகியவற்றுட் சொல்லப்பட்டுள்ள. அவற்றுட் சிலவற்றைக் காண்போம். பழைய தமிழ்நாடு சேர சோழ பாண்டியாகளால ஆளப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. சேரர்க ளுடைய தலைநகரம் வஞ்சி: சோழருடையது காவிரி புகும்பட்டினம்; பாண்டியருடையது மதுரை. இந்த நகரங்களில் கர்விரிபுகும்பட்டினத்தைப்பற்றி அறிவனவற்றை முதலிற் காண்போம். அங்கே பல திறப்பட்ட மக்கள் வாழ்ந்தனர்; தட்பவெப்பநிலை நன்றாக அமைந்திருந்தது. கடற்காற்று இனிமையாக வீசிக்கொண்டிருந்தது: மண் நல்ல வளம் பொருந்திய தாக இருந்தது. அந்நகர மக்களின் சிறந்த தொழில் உழவே. காவிரியாறு கடலோடு கலந்த அவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மைக்காக வானத்தை நோக்கி வாழ்ந்தவர் அல்லர். நெல்லும் கரும்பும் நிறைய விளைவிக்கப்பட்டன. அடுத்த சிறப்புடைய கைத் தொழிலாய் அமைந்திருந்தது நெசவே. அந்நகரத்திற் பஞ்சமும் தொழுநோயும் ஏற்பட்டதில்லை. அந்