பக்கம்:முன் பனிக் காலம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடும் நகரமும் 169 உடுப்பர்; பாடல்கள் கேட்பர்: நாடகம் காண்பர்; வெண்ணிலவின் பயனையும் துய்ப்பர். இவ்வாறு இனிமையாகப் பொழுது போக்கினர் என்றால், அம்மக்கள் மிக்க செல்வம் படைத்தவராகவும், உழைத்துழைத்து ஊதியம் திரட்டினராகவும் இருந் தனர் என்பது சொல்லாமலே விளங்கும் அன்றோ ? அவரெல்லாம் பகலிலே சாயுங்காலம் வரையும், ப்ொழுது போன் பின்னரும் தொழில் ஆற்றினவர். அவர்களிற் சிலர் பூவும் புகையும் விற்றவர்கள்: சிலர் வண்ணமும் சுண்ணமும் விலை பகர்ந்தவர்கள்: சிலர் பட்டாலும் எலி மயிராலும் பருத்தி நூலாலும் ஆன ஆடைகளை இப்ற்றி விலைக்கு விற்றவர்கள். இன்னும் சிலர் அவரை, துவ்ர்ை. முதலிய எண்வகைத் தானியங்களை விற்று ண்தியம் தேடினவர்கள்; சிலர் பிட்டும் அப்பமும் விற்றவர்கள்: மீன் விற்றவரும் உப்பு விற்றவரும் உண்டு. வெண்கலக் கன்னாரும், செம்புக்கொட்டிகளும்; மரவேலை செய்த தச்சரும், உழைத்துழைத்துக் களைத்துப்போன கொல்லரும் நாடகம்,நயந்தும் ஆடல்கள் ஒர்ந்தும் வந்தார் கள் என அறிகிறோம். காவிரிபுகும் பட்டினத்திலே உருக்குத் தட்டாரும், பணித்தட்டாரும், சிற்பாசிரியர் களும், ஓவிய வினைஞர்களும் தையற்காரர்களும் விரும்பித் தொழில் புரிந்தனர் என அறிகிறோம்.துணி யினாலும் நெட்டியினாலும் பூ, வாடர்மாலை, பொய்க் கொண்டை முதலிய பொருள்களை அமைக்கும் கைத் தொழில் வல்லவர்கள்.இருந்தார்கள். இவர்களைப்பற்றிச் சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்திற் செய்திகள் சொல்லப் பட்டிருக்கின்றன. புகாரின் கடற்கரைப் பக்கம் மருவூர்ப் பாக்கம் என ஒரு பிரிவாகவும் உட்பக்கம் பட்டினப்பாக்கம்