பக்கம்:முன் பனிக் காலம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் நகரமும் 171 கொண்டிருக்கிற பொழுதிலும், தம் கடமையில் 'டுவாராய் கையில் வில்லும் அம்புமாக இவர்கள் திரிவார்கள் என மதுரைக் காஞ்சிசொல்கிறது. மதுரை நகரத்தில் அக்காலத்தில் தொழில் புரிந் தார் இவரிவர் எனச் சிலப்பதிகாரம் கூறுவதை நோக்குவோம். சிலர் செம்பாலும் வெண்கலத்தாலும் பற்பல பாத்திரங்கள் செய்வர். சிலர் ஆனைக்கொம்பு முதலியவற்றைக் கடையும் தொழிலில் ஈடுபடுவர். வண்டியும் தேர்வட்டையும் தேர்க்கொடிஞ்சியும் செய் வோர் பற்பலர் உண்டு. கையில் துலாக்கோலொடும் மரக்காலொடும் நின்று பண்டங்களை நின்றவிடத்திலேயே அளந்து கொடுப்போர் பலர். சில கடைகளில் ஆடகப் பசும்பொன் விற்கப்படும். இங்கே சாம்பூநதம் விற்கப் படும்’, இங்கே சாதரூபம், கிளிச்சிறை விற்கப்படும்’ என்ற குறிப்புப்பட எழுதப்பட்ட கொடிகள் திகழும். அதனால், சாமான் வாங்குவோர் ஒவ்வொரு கட்ையிலும் புகுந்து திரும்பாமல் வேண்டிய கடையில் புகக்கூடிய வசதி செய்யப்பட்டிருந்தது என அறிகிறோம். - சேரர் பேரூர் ஒரூரின் தனிநிலை பெறாததாய் நானிலத்தின் பான்மையும் பொருந்தப் பெற்றிருந்தது. என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. அந் நகரத்தில் மலையும் கடலும் கானும் வயலுமுண்டு என்று சொல்லத்தக்கபடி ஒரு வருணனை காணப்படுகிறது. “குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாட்டினையும், உழவர் பாடிய ஒதைப் பாணியையும், இடையர் பாடிய குழலின் பாணியையும், நுளைச்சியர் பாடிய நெய்தற் பாணியையும் செங்குட்டுவன் மனைவி கேட்டனளாய்ப் படுக்கையில் இருந்தாள்’ எனக் கூறப்பட்டிருப்பதால், அந்நகரத்தின்