பக்கம்:முன் பனிக் காலம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாடும் நகரமும் தட்பவெப்ப நிலை கலப்பு வாய்ந்தது என்பது பெறப்படும். அங்கு வாழ்ந்த மக்கள் வேட்டுவரும், உழவரும், இடை பரும், பரதவரும் ஆகிய பல திறத்தவர் என்பதும் பெறப் படும். அந்த நகரத்தில், சிவனுக்கும், திருமாலுக்கும் சிறந்த கோயில்கள் அமைந்திருந்தன. அக்காலத்தில், தமிழரசருடைய தலைநகரங்களிற் பிறநாட்டு வேந்தருடைய ஒற்றர்கள் வாழ்ந்துவந்தார்கள் என்பதற்குரிய சான்று சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திற். க்ரன்கிறோம். சேரன் செங்குட்டுவன் வடநாடு புகுந்து ஆெற்றிகொள்ள,வேண்டும் எனத் தன் அமைச்சனிடம் த்ொல்லும்,அவன்.கண்ணகிக்குக் கோயில் எடுக்க ஒரு ஒலித்தத்தானே போக வேண்டும், வடநாட்டு,மன் னர்க்கு முடங்கல் அனுப்பினால், வந்துவிடும்” என்ற்ான். அப்பொழுது அழும்பில்வேள் என்பான், முடங்கல் வரைய வேண்டிா. இந்த ஊரிற்பறை அறைந்தாற் போதும். இவ்வூரின்கண் வடநாட்டு மன்னரின் ஒற்றராய் வந்திருப் போர் அறிவித்துவிடுவர்' எனச் செங்குட்டுவனுக்குச் சொன்னான் எனப் படிக்கின்றோம். இதனால், சேர ருடைய தலைநகரத்திற் பிற வேந்தரின் ஒற்றர்கள் வந்து தங்கியிருந்தனர் என்பதும், அவ்வாறோ என்ைப நாடு களில் தமிழ் வேந்தர்களின் ஒற்றர்கள் போப்த் தங்கி யிருந்தனர் என்பதும் அறியப்படும். இனி, நாட்டுப்புறங்களில் மக்கள் வாழ்க்கை நடத்தி வந்த விதத்தைப் பார்ப்போம். சில இடங்களில், உப்பு. வாணிகர் வண்டி நிறைய உப்பு மூட்டைகளை ஏற்றிப் பக்கத்து ஊருக்குக் கொண்டு போய்ச்சேர்ப்புர். அப்படிப் போகுங்கால், வண்டியில் பூட்டப்பட்ட எருது சோர்ந்தாற். பூட்டுதற்கு வேண்டும்என வேறு எருதுகளைத் தம்மொடு