பக்கம்:முன் பனிக் காலம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக் காலம் 1 f இவ்வளவு பனி பெய்கின்ற காலத்திலே, குளிரினால் உடம்பு நடுங்குகின்ற காலத்திலே, போர்வை வேண்டிய காலத்திலே, வெப்பத்தை விரும்புகின்ற நேரத்திலே, தண்ணிரிலே சென்று நீராடுதல் எங்ங்னம் இயலும் என்பார்க்கு விடை இறுப்பார்போல, மாணிக்கவாசகர் இறைவனுடைய ஆரழல் போன்ற மேனிய்ை நினைப் பார்க்கு, அவன் செம்மை நிறத்தைச் சிந்திப்பார்க்கு, வெண்ணிற்றினைப் பூசுவ்ார்க்கு, அவனுடைய பொன் னடியை எத்துவார்க்கு இப் பனிக்காலம் துயர் தராது என்ற குறிப்புப்பட இயம்பியுள்ளார்.

  • கையாற் குடைந்து குடைந்து உன்கழல் பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்; செய்யா வெண்ணிறாடி செல்வா. . . 杀 萍。 * எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்: என்பது அம்மொழி. இதுவரையில், முன்பனிக் காலத்தில் தோன்றும் பனித்திவலைகளைப் பற்றியும், மலரும் பூக்களைப் பற்றி யும், பழுக்குங் காய்களைப் பற்றியும், அக்காலத்தே மக்களுக்கு உண்டாகும் மெய்ப்பாடுகள் பற்றியும், அவர் உண்ண, உடுக்க, பருக விழையும் பொருள்களைப் பற்றியும், அக்கால நீராடல்கள் பற்றியும், நீராடுங்கால் தோன்றும் இறைவனைக் குறித்த எண்ணங்களைப் பற்றியும் பழந்தமிழிலக்கியங்களில் உள்ள சில செய்தி களைக் கண்டோம். - -