பக்கம்:முன் பனிக் காலம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மகளிர் பந்தாட்டம் பந்தாட்டம் என்பது மேனாட்டிலிருந்து நம் நாட். டிற்கு வந்தது என்று பலர் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். அது தவறு. மேலும், பந்தாட்டம் ஆட வர்க்கே உரியது என்று சிலர் நினைப்பதுண்டு. அது வும் தவறு. இப்படித் தப்பாக நினைத்து வருதற்கு முக்கிய காரணம், அவருட் பலருக்குப் பழந்தமிழ் நூல்களில் உள்ள செய்திகள் தெரிந்திலாமையே. அதனால், தமிழ் இலக்கியம் சிலவற்றிலிருந்து பெண்டிர் பந்தாட் டத்தைப் பற்றிய செய்திகள் சில இந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டப்படும். பந்து எப்பொழுதும் இரப்பரினாலேயே செய்யப் பட்டது என்று தப்பாக எண்ணிவிடுவதால் நம் நாட் டிற் பழங்காலத்திற் பந்து இல்லை, பந்தாட்டமும் இல்லை என்று தவறுதலாக எண்ண இடம் உண்டா கிறது. அந்தக் காலத்தில் பந்தை வேறு விதமாக உண்டாக்கினார்கள். எப்படி என்றால், நெட்டியினாலும், பஞ்சினாலும், பட்டினாலும் அவை உண்டாக்கப்பட்டன என்று சொல்ல வேண்டும். நெட்டியும், பஞ்சுத் தொகு தியும் எழுப்பினால், மேலே எழும்பும் தன்மை வாய்ந்தவை. உலண்டு என்து ஒரு வகைப் புழு உண்டு. அந்: தப் புழுவிலிருந்து ஒரு வகையான அழகிய பட்டு