பக்கம்:முன் பனிக் காலம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் பந்தாட்டம் 13 எடுக்கப்படும். அந்தப் பட்டு பொன்னிறம் உடை யது. உலண்டிலிருந்து வந்த பட்டும் எழுப்பினால், எழும்பும் தன்மை வாய்ந்தது. இப்படி எழும்பும் தன்மையுட்ைய நெட்டி, பட்டு இவற்றினால் அக்கால்த் திலே பந்துகள் செய்தார்கள் என்று பெருங்கதை யென்ற நூலினால் அறிகிறோம். இவற்றைச் சேர்க்க வேண்டிய அளவு சேர்த்து, நன்றாகத் திரட்டி, நூலா லும் கயிற்றாலும் நுண்மையாகச் சுற்றித் தைத்து, மகளிர் விளையாடினார்களென அறிகிறோம். அப்பந்து கள் வெண்ணிறம், செந்நிறம், கருநிறம் உடையன. காற்று வீசினாலும் அவை தாமாக எழுந்து ஆடுகின்ற அளவு நொய்மை வாய்ந்தவை. இந்தக் காலத்திலே உள்ள பிங்பாங் (Ping-Pong) ஆட்டத்திற்கு உரிய செல்லுலாயிட் (Celluloid) பந்தைவிட அவை மெல்லி யனவாய் இருந்தன என்று கருதலாம். அவை கண்ணைப் பறிக்கும் அழகையுடையன. அந்த அழகு மனத்தை விட்டு அகலுவதுகூட அருமை. இவ்வளவு சிறப்புடைய பந்துகள் பலவற்றைப் பல்வேறு வகை யாக அந்தக் காலத்திற் செய்தார்கள் என்பதைக் கொங்குவேள் என்னும் புலவர்,

பற்றிய நொப்ம்மையிற் பல்வினைப் பந்துகள் வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த வெண்மையும் செம்மை கருமையும் உடையன தண்வளி எறியினுங் தாமெழுந்து ஆடுவ கண்கவர் அழகொடு நெஞ்சக லாதன’’ என்றவாறு பெருங்கதையிற் சொல்லியிருக்கிறார்.

இவற்றைப் போன்ற பந்துகள் ஐந்து, எழு, ஒன்பது என்று அவரவர் திறத்திற்குத் தக மகளிர்