பக்கம்:முன் பனிக் காலம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மகளிர் பங்தாட்டம் எடுத்துக்கொண்டு தட்டியெழுப்பி அடிப்பது அக் காலத்து வழக்கம். புருவம் வில்போல வளையும்படியும் மேகலை முதலான அணிகள் மிக்கு ஒலிக்கும்படியும், முன்னும் பின்னும் எல்லாவிடத்திலும் பந்து சென்று உலாவி வரும்படியும் அடிப்பது வழக்கம். பார்த்தால் மேலே போன பந்து கையில் வரவில்லை போலத் தோன்றும். ஆனால், பந்து மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டேயிருக்கும். பந்து எழுந்தும் தாழ்ந் தும் வருகிற வேகத்தில் சிலர் ஒன்றுந்தெரியாமல், இருந்த பந்து இருந்த இடத்திலேயே உள்ளது என்ற வாறு நினைத்துவிடுவார்கள். இப்படித் தோன்றும்படி யாகப் பந்தடிப்போம் வாருங்கள்’ என்று சொல் லிச் சேரநாட்டு மகளிர் சிலர் பந்தடித்ததாக இளங்கோ அடிகள் கூறினார். அவர் எழுதிய சிலப் பதிகாரப் பாட்டுப் பகுதி மகளிர் பந்தடிக்குங்கால், சொல்லிக்கொண்டு அடிக்கத்தக்க அழகிய ஓசையை புடைய பாட்டாக இருக்கிறது. அதனைக் காண்போம்: துன்னி வந்து கைத்தலத் திருந்த தில்லை கணிலம் தன்னி னின்றும் அந்தரத்து எழுந்த தில்லைதானெனத தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்றுபந் தடித்தும்ே தேவ ரார மார்பன் வாழ்க என்றுபக் தடித்துமே.” இந்தப் பாட்டைக் கந்துக வரி என்பார்கள். (கந்துகம் என்றால் பந்து. வரி என்றால் பாட்டு.) - - இப்படிப் பந்தடித்த செய்தியைத் திருத்தக்க தேவர் என்னும் புலவரும் நயம்படத் தெரிவித்துள் ளார். சீவக சிந்தாமணி என்ற காவியத்தில், விமலை’ என்னும் ஒரு வணிகப் பெண் பந்தடித்த செய்தியைக் குறித்து அவர் எழுதிய இடம் காணத்தக்கது. அந்தப்