பக்கம்:முன் பனிக் காலம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#6 மகளிர் பந்தாட்டம் பதிலாக, சமயம் பார்த்துப் பொட்டு ஒன்றும் போட்டுக் கொண்டாள். அவள் ஆடும்போது காதில் உள்ள குழையணி வில்லைப் போல வீசிற்று; பொன்னோலை மின்னலைப் போலத் துலங்கிற்று : இடையிற் கட்டி யிருந்த ஒட்டியாணமும் காலில் அணிந்திருந்த சிலம்பும் ஆர்த்தன. இவ்வண்ணம் பந்தாடினாள் விமலை. இவ்வாறு பந்தடித்தல் எளிது என்று நினைக்கக் கூடாது. மென்மையாகத் தட்டவேண்டிய வேளையிலே சிறிது வன்மைபடத் தட்டிவிட்டால் வந்தது தீமை. அப்படியே சற்று வலிவாகத் தட்ட வேண்டிய நேரத் லே பையத் தட்டினாலும், பையத் தட்ட வேண்டிய வேளையிலே தட்டச் சுணங்கினாலும் பந்தடுக்குக் கெட்டு, ஒன்றோடு ஒன்று உராய்ந்து நிலைமை எல்லாம் வீணாய்ப் போய்விடும். அப்படித்தான் ஆயிற்று ஒரு நாள். விமலையினுடைய மாலையைத் தொட்டுவிட்டு மேலே செல்லவேண்டிய பந்தைச் சற்று அதிகமாக அவள் அடித்துவிட்டாள். ஆனதால், அந்தப் பந்து தப்பி வீழ்ந்து எழுந்து பாய்ந்து மாடத்திலிருந்து தெருவிற் குதித்துவிட்டது. இதிலிருந்து, சில பந்து களை விடாமல் நெடுநேரம் அடித்தல் எவ்வளவு கடினம் என்பது விளங்கும், வத்தவ நாட்டு அரசனாகிய உதயணனுடைய மனைவியர் இரண்டுபேருங் காணும்படி, அவ்விருவ ருடைய தோழிமார் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் விஞ்சுவாராய்ப் பந்தடித்தார்கள் என்ற செய்தியைப் பெருங்கதை தெரிவிக்கிறது. அதனையுங் காண்போம்.