பக்கம்:முன் பனிக் காலம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் பந்தாட்டம் 17. ஒருத்தி ஏழு பந்தை எடுத்துக்கொண்டு ஒன் றொன்றாக உயர எழுப்பிக் கண் இமையாமல் எண் னுங்கள்’ என்று சொல்லி, ஆயிரந்தரம் கையினால் அடித்தாள். இன்னொருத்தி அந்த ஏழு பந்தையே ஆயிரத்தைந்நூறு முறை ஒரே மூச்சில் அடித்தாள். அப்படி அடிக்கும். போது, கூந்தலின் மேலே போய் வந்த பந்தைக் குவித்த விரலாலேயே எழுப்பினாள். சில பந்தை மேகலைக்கு எதிரே அடித்தாள். இன்னுஞ் சிலவற்றைத் தனது தலை மாலையாலே சார்த்தியெழுப்பினாள். - கூனி ஒருத்திஅேந்த ஏழு பந்தையும் கொண்டு இரண்டாயிரம் முறை அடித்தாள். அப்பொழுது நான்கு திசையிலும் நான்கு மூலையிலும் காற்றினும் வேகமாக ஒடியாடி அடித்தாள். பந்துகளைத் தட்டி விட்டுவிட்டு இடைநேரத்தில் இரண்டு கையையும் தட்டினாள் தோள்மேலே சில பந்தைப் பாய்ச்சினாள். கூன்மேலே சிலவற்றைப் புரட்டினாள். பாடிக் கொண்டும், அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டும், நெற்றியில் உள்ள பொட்டிடையேற்றும், பொட்டிலே பட்ட பந்தைப் புறங்கையாலே தட்டி எற்றியும் இரண்டாயிரம் முறை அடித்து நிறுத்தினாள். கூனி இப்படிச் செய்ததைக் கண்ட குள்ளி பொருத்தி, நான் இங்கு இருக்கும்போது கூனி புகழப் படும்படி அடிப்பதா?’ என்று சொல்லி, சிலையை இதுக் கிக் கட்டிக்கொண்டு கையிலே பந்தடிக்குங் கோலை எடுத்துக்கொண்டு 2,500 முறை அடித்துவிட்டாள். அதன்னைக் கொங்குவேள், மு.கா.-2