பக்கம்:முன் பனிக் காலம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மகளிர்பந்தாட்டம் தோக்கினால், பல கைகன் உள்ளவள்போல இவள் காணப்படுகிறாள் ; தேர்ச் சக்கரத்தைப் போலச் சுழன்று சுழன்று அன்றோ அடிக்கிறாள் ; நடக்கிறாள்; ஒடுகிறாள்; துவளுகிறாள்! பந்து எழ எழ, அதனுடன் எழுகிறாள்! இவள் கையெங்கே, கால் எங்கே, மெய் எங்கே எனத் தெரியவில்லையே என்கிறார் சிலர். இவள் மண்ணில் இருக்கிறாளா, விண்ணில் இருக்கிறாளா என்கிறார்சிலர். இது. மாயமா, மந்திரமா என்கிறார் சிலர். இவர்க்ள் கண்ன்ேறு’பட்டது போல, கூந்தல் குலைந்தது மாலை'சுழன்றது; மேகலை கழன்றது: வியர்வை எழுந்தது. சந்தம் இழிந்தது. அப்பொழுதும் பந்தடித்த்லை நிறுத்தவில்லை மானனீகை. ஆடையைத் திருத்திக்கொண்டு அடிக்கிறாள். கண்ணை மூடிக் கொண்டு அடிக்கிறான். சக்கர்த்தைப் போலச் சுழற்றி விட்டு (twist) அடிக்கிறாள். தோழியோடு பேசிக் கொண்டும், பாடிக்கொண்டும் அடிக்கிறாள். இடசாரி வலசாரியாக ஒட்டி விட்டும் (drive) அடிக்கிறாள். வாழ்த்திக்கொண்டு அடிக்கிறாள். இதனைக் கொங்கு வேள், - 'கித்திலக் குறுவியர் பத்தியில் துடைத்தும் அடிமுதல் முடிவரை இழைபல திருத்தியும் சிம்புளித் தடித்தும் கம்பிதம் பாடியும் ஆழியென உருட்டியும் தோழியொடு பேசியும் சாரிபல ஒட்டியும் வாழியென வாழ்த்தியும்’ அடித்தாள் என்று கூறிய வகையான் அறியலாம். இப்படியெல்லாம் எண்ணாயிரம் முறை அவளுடைய கையினால் அடித்தாள். எடுத்துக்கொண்ட பந்து இரு