பக்கம்:முன் பனிக் காலம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் பந்தாட்டம் 2 f பத்தொன்று. மொத்தத்தில் இவள் அடித்த முறை எண்ணாயிரம். அடிக்கும்போது, கூத்தும் பாட்டும் தாளமுஞ் சேர்ந்தன. இது வியக்கத்தக்க செய்தி அன்றோ ! இப்படிப் பந்தடிக்கிற வழக்கம் அக்காலத் துத் தமிழ்நாட்டில் உண்டு. ஆதலினாலே கொங்குவேள் ஆகிய தமிழ்ப்புலவர் "பந்தடி கண்டது” என்று ஒரு தனிப் பகுதியைத் தாமியற்றிய பெருங்கதையிற் புகுத் தினார். பெருங்கதை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற தமிழ்க் காவியங்கள் துணையாகத் தமிழ் நாட்டு மகளிர் பண்டைக் காலத்திற் பந்தாட்டம் போன்ற ஆட்ல்களை இயற்றி மகிழ்ந்ததையும், மகிழ் வித்ததையும் அறிந்து இன்புறலாம்.