பக்கம்:முன் பனிக் காலம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்று இன்னும் தமிழ் மக்கள் சரியாய் உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை, மனப்பான்மை, சரித்திரம் இவைகளை நாம் அறிவதற்குப் பண்டைத் தமிழிலக்கியங்களே இன்றியமையாத கருவூலங்களாய் இருக்கின்ன.

உலகில் தோன்றிய பல மொழிகளும், அம் மொழிகளைப் பேசிய பல மக்களும் காலப்போக்கில் பெரிய மாறுதல்கனை அடைந்திருக்கக் காண்கின்றோம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வழக்கிலிருந்த கிரீக் மொழியை இக்காலத்துக் கிரீக் மக்கள் எளிதில் புசித்துகொள்ள முடியாது. அம்மொழியைப் பேசி கிரீக் மக்களுக்கும் இக்காலத்துக் கிரீக் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்றுமில்லை; இப்படித் தான் மற்ற பழைய மொழிகளும்.

ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாய் அடிப்படையில் ஒரே உருவத்துடன் இன்றும் வழக்கில் வாழும் மொழி தமிழ் ஒன்றுதான். அது மட்டுமன்று. தமிழ் இலக்கியங்களை நாம் ஆராய்ந்து படிக்கும்போது, மனப்பான்மையிலும் இன்ப துன்பங்களிலும் அக்காலத்துத் தமிழ் மக்களுக்கும் இக்காலத்து நமக்கும் அதிக வேற்றுமை இல்லையென்று தோன்றுகிறது.